தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கலின் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (08) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய போது, அவர் இதனைக் கூறினார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, அதில் 25 சதவீதமானோர் பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, ஒவ்வொரு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலில் – வட்டாரத்தில் 10 சதவீதமானோரைப் பெண்களாகவும், மேலதிக பட்டியலில் 50 சதவீதம் பெண்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அதேநேரம், வேட்புமனுவில் 25 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, வேட்புமனு தயாரிப்பின்போது, அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் இவை தொடர்ிபல் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.