தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வைப்புத்தொகை செலுத்தியோர் தொடர்பில் தகவல் வெளியீடு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை வைப்புத்தொகை செலுத்தியுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் விவரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மார்ச் 03ஆம் திகதி வைப்புத் தொகை ஏற்றுக் கொள்ளும் நடைமுறை தொடங்கியது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மார்ச் 7) மாலை 4.15 மணி நிலவரப்படி 168 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வைப்புத்தொகைகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த 168 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இதுவரை 18 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 57 சுயேச்சைக் குழுக்களும் வைப்புத்தொகை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை – வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என, ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.