தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் திகதி தொடர்பான முடிவு இன்று எடுக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி குறித்த முடிவு இன்று (27) எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழு இன்று நடத்தவுள்ள கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், ஜூன் 02, 2025 அன்று உள்ளூராட்சி சபைகள் முதல் முறையாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்கு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.