
– றிசாத் ஏ காதர் –
இலங்கை யூனானி மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச யூனானி தினம் – இன்று (26) புதன்கிழமை திருகோணமலை ஜெகப் கடற்கரை விடுதியில் கொண்டாடப்பட்டது.
யூனானி தின நிகழ்வு ஏற்பாட்டுக்குழு தலைவர் டொக்டர் ஏ.டள்ளியு.எம். மாஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கெளரவ அதிதியாக சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் டொக்டர் எம்.ஏ. நபீல் கலந்து சிறப்பித்ததுடன், விசேட அதிதியாக அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் ஆகியோருடன் கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் யூனானி தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாட்டுக் குழுவினால் மலர் வெளியிடப்பட்டது.
‘ஹிஜாமா பற்றி அறிந்துகொள்வோம்’ எனும் தலைப்பிலான நூலை, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், நிகழ்வு ஏற்பாட்டுக் குழுச் செயலாளருமான டொக்டர் ஐ.எல். அப்துல் ஹை வெளியிட்டு வைத்தார்.
இந்த நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ துறையின் பேராசிரியரும், சிரேஷ்ட விரிவுரையாளரும் எம்.எஸ்.எம். சிபா – ‘டொக்டர் எச்.எம். ஜாபிர் ஞாபகார்த்த விருது’ம், கப்பல்துறை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட மருத்துவ உத்தியோகத்தர் எம்.எச்.கே. பாயிஸ் – ‘டொக்டர் ஜலால்தீன் ஞபாகார்த்த விருது’ம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.






