
– தில்சாத் பர்வீஸ் –
ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று திங்கட்கிழமை (24) இரவு 10.00 மணியளவில் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாகியதுல் சாலிகா சந்தியில் வைத்து, கல்முனை விசேட அதிரடிப் படையினர் இருவரை கைது செய்தனர்.
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப் பொருளுடன் இவர்கள் கைதானார்கள்.
அட்டாளைச்சேனை- 16 பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரும், மருதமுனை – 03 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து 910 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றவரிடம் இருந்து 780 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டன. இதனயைடுத்து சான்றுப்பொருட்கள் சந்தேக நபர்கள் சட்டநடவடிக்கைக்காக பெரியநீலாவனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவனை பொலிஸார் மற்றும் கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



