
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் நடைபெற்ற போது, அதற்கு ஆதரவாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாக்களித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்குரிய இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) நாடாளுமன்றத்தில் 109 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 6:10 மணியளவில் நடைபெற்றது, வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட நான்கு பேர் – வெளிநாடு சென்றுள்ளமையினால், வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதன்போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.



