
முன்னர் வாக்குறுதியளித்தபடி, நாட்டின் உச்ச சம்பளங்களில் முதல் 10 இடங்fளுக்குள் ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு – அரசாங்கம் தவறிவிட்டது என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விமர்சனங்களை கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய மறுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய; அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறறினார்.
“அதிபர்களின் சம்பளம் 30,105 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் சம்பளம் 25,360 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சம்பள தரங்களில் அதிபர்கள் 07வது இடத்திலும், ஆசிரியர்கள் 08வது தரத்திலும் உள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.



