
மின்சாரக் கட்டணங்களை எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
தற்போதைய வரட்சி – மின்சார உற்பத்தி செலவுகளை பாதிக்கும் என்றும், இது கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும், ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியின் போது, அமைச்சர் குமார ஜெயக்கொடிகூறினார்.
இலங்கை மின்சார சபை லாபம் பெறுவதாக கூறப்படுகின்றமை குறித்து பேசிய அவர், மின்சார சபைக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை என்றும், செலவுகள் மட்டுமே உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
“மின்சார சபையின் செலவுகள் நஷ்டமாக கணக்கிடப்படவில்லை. எனவே, சபை 140 பில்லியன் லாபத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்ச்சியான பொய்” என்றும் அவர் கூறினார்.
இலங்கை மின்சார சபை லாபம் பெறவில்லை. ஆனால் மின்சார உற்பத்திக்கான செலவுகளே ஏற்படுகின்றது என்றும் அமைச்சர் குமார ஜெயக்கொடி குறிப்பிட்டார்.
நிலவும் வறட்சி நிலைமைகளைப் பொறுத்து மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்று எரிசக்தி அமைச்சர் எச்சரித்தார்.



