தலைப்புச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவுகள் எவ்வளவு?: பிரதமர் வெளிப்படுத்தினார்

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிட்ட நிதி தொடர்பான தகவல்களை இன்று (27) பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

வெவ்வேறு நிர்வாகங்களின் கீழ் செலவினங்களில் கடுமையான வேறுபாடுகள் உள்ளமையினை அவர் இதன்போது எடுத்துக்காட்டினார்.

2010 – 2014 காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ: 3,572 மில்லியன் ரூபாய்
2015 – 2019 மைத்திரிபால சிறிசேன: 384 மில்லியன் ரூபாய்
2020 – 2022 கோத்தபய ராஜபக்ஷ: 126 மில்லியன் ரூபாய்
2023 – 2024 ரணில் விக்ரமசிங்க: 533 மில்லியன் ரூபாய்
2024 செப் – 2025 பிப்ரவரி அனுரகுமார திசாநாயக்க: 1.8 மில்லியன் ரூபாய்

இதன்படி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகம் செலவினங்களைக் கணிசமாகக் குறைத்துள்ளதாகவும், ஐந்து மாதங்களில் வெளிநாட்டுப் பயணங்களுக்கு 1.8 மில்லியன் ரூபாயை மட்டுமே பயன்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய கூறினார்.

“நாங்கள் வெறும் வார்த்தைகளால் அல்ல, செயல் மூலம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டோம். இங்கே, நாங்கள் அதைச் சரியாகச் செய்துள்ளோம்” என்று பிரதமர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2013 ஆம் ஆண்டில் அதிகபட்ச செலவு பதிவு செய்யப்பட்டது என்றும், ஒரே ஆண்டில்1,144 மில்லியன் ரூபாய் செலவிட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.