தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களினுடைய பதவிக் கால தொடக்கம் குறித்து அறிவிப்பு

நாடு முழுவதிலுமுள்ள 337 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களினுடைய பதவிக்காலம் 02.06. 2025 அன்று தொடங்க வேண்டும் என்று – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், 252ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் துணைப்பிரிவு (1) இன் பத்தி (ஆ) மற்றும் பிரிவு 10 இன் மூலம் – அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

337 உள்ளூராட்சி மன்றங்களில் 27 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 274 பிரதேச சபைகள் அடங்கும்.