
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத்தொகையை செலுத்திய வேட்பாளர்கள், பிப்ரவரி 28, 2025க்கு முன்னர் தங்கள் நிதியை திருப்பி பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இது குறித்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வேட்பாளர்கள் பணத்தை வைப்புச்செய்த செய்த பின்னர் பெற்ற அசல் பற்றுச்சீட்டை – பணத்தை மீளப் பெறுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் 17ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் படி – வைப்புத்தொகை திருப்பிச் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு – தேர்தல் ஆணைக்குழுவுககு உதவும் வகையில் மேற்படி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.



