
நீதிமன்றத்தினுள் இன்றைய தினம் கனேமுல்ல சஞ்சீவ எனும் போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுக் கொன்றவர் எனச் சந்தேகிக்கப்படுகின்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பாலவியா பகுதியில் வேனில் தப்பிச் செல்லும்போது, விசேட அதிரடிப்படையினர்- அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதான முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இலங்கை ராணுவ கமாண்டோ படைப்பிரிவின் முன்னாள் உறுப்பினராவார்.
வழக்கு விசாரணையொன்றுக்காக இன்று புதுக்கடை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ என்பவரை, சட்டத்தரணி போன்று வேடமிட்டு வந்த நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றார்.
தொடர்பான செய்தி: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; கனேமுல்ல சஞ்சீவ பலி: சட்டத்தரணி போல் வந்தவர் கைவரிசை



