தலைப்புச் செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; கனேமுல்ல சஞ்சீவ பலி: சட்டத்தரணி போல் வந்தவர் கைவரிசை

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இன்று (19) காலை இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவருமான ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் – சட்டத்தரணி போல் நடித்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் பாருங்கள்