
இலங்கையின் பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லஸ்ஸி’ என அழக்கப்படும் ஜனித் மதுஷங்க இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 09, 2025 அன்று, பொடி லஸ்ஸி – பலபிட்டி நீதவான் நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலைத் துறையின் சில உயர் அதிகாரிகளுக்கு எதிராக, பூசா சிறைச்சாலையில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் அவர் இரண்டாவது சந்தேக நபராக இவர் பெயரிடப்பட்டிருந்தார்.
‘பொடி லஸ்ஸி’ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக – பல குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக பூசாவில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
மேலும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவின் உதவியுடன் – போதைப்பொருள் கடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவருக்கு எதிராக பல நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.



