
மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 09.20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க கூறியுள்ளார்.
ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு காயமடைந்தவர்கள் வைத்தியசானையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரின் மரணத்தை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வழக்கின் சாட்சிகள் என்றும், விசாரணைக்காக நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தனர் என்றும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மன்னார் காவல்துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.



