
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீனா சென்றுள்ள நிலையில், இலங்கையின் எரிசக்தி அமைச்சுக்கும் முன்னணி சீன பெட்ரோலிய நிறுவனமான சினோபெக்கிற்கும் இடையே 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது, ஹம்பாந்தோட்டை பிராந்தியத்தில் ஒரு நாளைக்கு 02 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு வழி வகுக்கிறது.
சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தியில் கணிசமான பகுதி ஏற்றுமதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் அந்நிய செலாவணி வருவாயை அதிகரிக்கும்.
இந்த திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கும் அதே வேளையில் – ஹம்பாந்தோட்டை பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் நடந்த இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் வெளியுறவு, தொழிலாளர் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



