தலைப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு அதிகாரிகள் நியமனம்

– நூருல் ஹுதா உமர் –

கிழக்கு மாகாண திணைக்களங்கள் மற்றும் பிரதான நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ன.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இந்த நியமனங்களை இன்று (27) வழங்கினார்.

அந்த நியமனங்களின் விபரம் வருமாறு;

  1. வில்வரத்தினம் – பதில் பிரதி பிரதம செயலளர் (நிர்வாகம்)
  2. நடராசா சிவலிங்கம் – சிரேஷ்ட உதவிச் செயலாளர் – முதலமைச்சு அலுவலகம்
  3. ஏ.எல்.எம்.அஸ்மி – உள்ளூராட்சி ஆணையாளர்
  4. மணிவண்ணன் – கிராமிய தொழில்துறை பணிப்பாளர்
  5. வளர்மதி ரவீந்திரன் – கிழக்கு மாகாண காணி ஆணையாளர்
  6. ஐ.எம். றிகாஸ் – கிழக்கு மகாண கல்வி மேலதிக பணிப்பாளர்
  7. என்.எம். நௌபீஸ் – அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர்
  8. என்.தனஞ்செயன் – மட்டக்களப்பு மாநகர ஆணையாளர்
  9. ஏ.டி.எம். ராஃபி – கல்முனை மாநகர ஆணையாளர்
  10. கே. இளம்குமுதன் – கிராமிய அபிவிருத்தி பணிப்பாளர்
  11. எம்.ஆர். பாத்திமா ரிஃப்கா – முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவு பணிப்பாளர்
  12. எஸ். பிரகாஷ் – விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர்
  13. உ. சிவராஜா – சமூக சேவை பணிப்பாளர்
  14. வி. தேவநேசன் – உதவி உள்ளூராட்சி ஆணையாளர் – மட்டக்களப்பு மாவட்டம்
  15. எஸ். வருணி – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்

இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அதிகமானோர் மேற்படி நிறுவனங்களில் இதற்கு முன்னர் பணியாற்றிய நிலையில், அவர்களின் பணியிடங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.