தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக, நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்துக்களை, லஞ்ச – ஊழல் ஆணைக்குழு கையகப்படுத்தியுள்ளதாக, பத்திரிகை விளம்பரம் ஒன்றின் ஊடாக, மேல் மாகாண மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழு 18 வங்கிக் கணக்குகளையும் 05 ஆயுள் காப்புறுதிக் கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளதுடன், கொழும்பு 05 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சொகுசு கார் (Mercedes-Benz) ஒன்றும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்ற விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானவையாகும்.

2024 டிசம்பர் 23 முதல் 2025 ஜனவரி 03ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில், இந்த சொத்துக்களை லஞ்ச ஊழல் ஆணைக்குழு கையகப்படுத்தியுள்ளது.