தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தலுக்கு எவ்வளவு செலவிட்டுள்ளனர் என தெரியுமா?

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுகளை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி தேர்தலில் அதிக செலவு செய்த வேட்பாளர் – ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆவார். இவர் 1.12 பில்லியன் (112 கோடி) ரூபாயை செலவிட்டுள்ளார்.

மேற்படி தொகையில் சஜித் பிரேமதாச – வேட்பாளர் மற்றும் கட்சி எனும் வகையில் 936.26 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளார். அவரின் தேர்தல் பிரச்சாரத்துக்காக 194.09 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் அதிக செலவு செய்த இரண்டாவது வேட்பாளராவார். அவர் 990.33 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளார். சுயேட்சை வேட்பாளர்களில் அதிகம் செலவிட்டவர் ரணில் விக்ரமசிங்க ஆவார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி எந்தவொரு செலவும் செய்யவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு செலவுகளாக 68,066.36 ரூபாயையும், அவரின் கட்சி தேர்தலுக்கு 528.00 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவும் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து எந்தவொரு செலவையும் தெரிவிக்கவில்லை, ஆனால் அவரின் கட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக 388.94 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது.

திலித் ஜயவீர ரூ. 324.64 மில்லியன் ரூபாயை – அவரின் தனிப்பட்ட நிதியில் இருந்து செலவிட்டுள்ளார்.