
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், 2015ஆம் ஆண்டு முதல் பயன்படுத்திய அரச இல்லம், எதிர்வரும் நொவம்பர் மாதம் 17ஆம் திகதி அரசிடம் ஒப்படைக்கப்படும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் பொது நிர்வாக அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ரா. சம்பந்தன் இவ்வருடம் ஜுலை மாதம் 01ஆம் திகதி காலமானார்.
கொழும்பு 07, மஹகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீடு,ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது – இந்த வீடு சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது,
முன்னாள் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக, அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவராக இருக்கும் வரை, சம்பந்தன் இந்த வீட்டைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரினார்.
2017ல் அப்போதைய அசாங்கம், இந்த வீட்டை புனரமைக்க 35 மில்லியன் ரூபாய் செலவிட்டது, தேசிய நல்லிணக்கத்திற்கு சம்பந்தன் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி கயந்த கருணாதிலக இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிதிருந்தார்.
அரசு இல்லங்களைப் பயன்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள், அங்கிருந்து உடனடியாக வெறியேறுமாறு பொது நிர்வாக அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது,



