தலைப்புச் செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிராக மனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்க உத்தரவிடுமாறு கோரி, உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாடாளுமன்ற ஆசனத்தைப் பெறவோ அல்லது வாக்களிக்கவோ உரிமை இல்லை என்று அறிவிக்குமாறு கோரி, மேற்படி மனுவை கம்பஹா மாவட்ட சுயேட்சை வேட்பாளர் கே.எம். மகிந்த சேனாநாயக்க தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பலர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.