
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க – ஜனாதிபதிக்குரிய தனது சம்பளததை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கான சம்பளத்தை தான் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, அனுர குமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார்.
அதற்கிணங்க, அவர் தனது சம்பளத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.
இந்த நிதியத்தின் மூலம் – முன்பள்ளி ஆசிரியைகளுக்கான சம்பளம், பொதுமக்களுக்கான நிதியுதவிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



