தலைப்புச் செய்திகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் ராஜிநாமா: ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பேரில் நடந்ததாக தகவல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் தமது இராஜினாமா கடிதத்தை நேற்று (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்ழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினரகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து – இந்த ராஜினாமாக்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த மற்றும் ஆணையாளர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அறிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட மேற்படி உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் மார்ச் 2025 இல் முடிவடைகிறது.