தலைப்புச் செய்திகள்

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் நாளை வழங்கப்படும்

திர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை (16) வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்பு எண்களை ஆணைக்குழு பெற்றுள்ளதாகவும், அவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருவதாகவும் தேர்தல் ஒழுங்குபடுத்தும் பிரிவின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். இலக்கங்கள் சரிபார்க்கப்பட்டதும், ஆவணங்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்படும்.

அதற்கிணங்க இன்றும் (15) நாளையும் (16) விருப்பு இலக்கங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு இணையாக இன்று காலை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறுகிறது.

ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச செலவு உட்பட, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் முக்கிய அம்சங்கள் இதன்போது விவாதிக்கப்படும்.