
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 28 வேட்பாளர்களும் அவர்களது நியமனக் கட்சிகளும் மட்டுமே முழுமையான தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் செலவு அறிக்கையை சமர்பிப்பதற்கான காலக்கெடு நேற்று 13ஆம் திகதியுடன் முடிவடைந்ததாகவும், அதற்குள் 35 வேட்பாளர்கள் மட்டுமே தங்கள் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவற்றில், ஏழு வேட்பாளர்களின் செலவு அறிக்கையைச் சமர்ப்பித்ள்ள நிலையில், அவர்களின் நியமனக் கட்சிகள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறி விட்டன.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களான பத்தரமுல்லே சீலரதன தேரர், சுயேச்சை வேட்பாளர் சரத் கீர்த்திரத்ன மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்தக் காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறும் வேட்பாளர்களுக்கு,1981 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் கீழ் 01 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.



