தலைப்புச் செய்திகள்

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

ற் எனப்படும் பெறுமதி சேர் வரியினை செலுத்தாக குற்றத்துக்கா, டப்ளி.எம். மென்டிஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் இருவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த சிறைத்தண்டனையை இன்று (14) விதித்துள்ளது.

3.5 பில்லியன் ரூபாய் வற் வரி செலுத்தத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, இவ்வாறு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.