
ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்களிக்குமாறு பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக – தேர்தல் ஆணையாளர் தரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு செய்வது சட்டவிரோதமானது என்ப எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்துக்குப் புறம்பானது மட்டுமன்றி நெறிமுறையற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“இது சட்டவிரோதமானது மட்டுமல்ல, நெறிமுறையற்றதும் கூட. இந்த வேட்பாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே பொதுமக்கள் தாங்களாகவே முடிவு செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பில், வாக்காளர்கள்தான் முடிவுவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



