ராஜாங்க அமைச்சர்கள் நால்வர் உடனடியாகப் பதவி நீக்கம்: ரணில் அதிரடி

🕔 September 5, 2024

ராஜாங்க அமைச்சர்கள் நால்வரை – அவர்களின் பதவிகளிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நீக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்), இந்திக்க அனுருத்த (மின்சக்தி மற்றும் எரிசக்தி), மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபால கம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது பதவிகளில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பின் 47(3)(a) பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்