
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வெற்றி பெற்றால், தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றிபெற்ற போது, அப்போது பிரதமராகவிருநத ரணசிங்க பிரேமதாசவே – தொடர்ந்தும் அந்தப் பதவியை வகித்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றிபெற்ற போது, ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரதமராக இருந்தார்.
1999 இல் சந்திரிக்கா குமாரதுங்க தனது இரண்டாவது அமைச்சரவையை அமைத்த பின்னரும் ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரதமராகத் தொடர்ந்தார்.
எனவே, பதவியில் இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஜனாதிபதியானால், பதவியில் இருக்கும் பிரதமர்தான் தொடர்ந்தும் அந்தப் பதவியை வகிப்பது வழமையாகும்” என, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.



