
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் – பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (20) கொழும்பில் இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்த புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புதிய அரசியல் கட்சிக்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான அரசியலமைப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதால், அந்த அரசியலமைப்பின் படி செயற்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.



