
இலங்கை மின்சார சபை இந்த வருடத்தின் ஏப்ரல் தொடக்கம் ஜூன் வரையிலான காலாண்டில் வரிகளுக்குப் பிந்திய நிகர லாபமாக 34.53 பில்லியன் ரூபாயை சம்பாதித்துள்ளது.
இவ்வருடம் ஜனவரி – மார்ச் காலாண்டில் 84.67 பில்லியன் ரூபாயை வரிகளுக்குப் பின்னர் மின்சார சபை லாபமாக ஈட்டியிருந்தது.
அந்த வகையில், இவ்வருடம் முதல் பாதியில் 119.20 பில்லியன் (11920 கோடி) ரூபாயை லாபமாக மின்சார சபை பெற்றுள்ளது.
கடந்த வருடம் ஜுன் மாதத்தில் நிறைவடைந்த காலாண்டில் பெற்ற லாபத்துடன் 2024 ஜூன் காலாண்டில் பதிவான 34.53 பில்லியன் ரூபாயினை ஒப்பிடுகையில், இது 67.2% அதிகரிப்பாகும்.



