தலைப்புச் செய்திகள்

பொய்யாக பரப்பப்படும் தகவல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – நாட்டிலுள்ள எந்தவொரு வாக்குச் சாவடியிலும் வாக்களிக்க முடியும் எனப் பரப்பப்படும் தகவலை தேர்தல் ஆணைக்குழு மறுத்துள்ளது.

அதுபோன்ற எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்றும், தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர் டாப்பில் பதிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் மட்டுமே – வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.