தலைப்புச் செய்திகள்

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்.

15 செப்டம்பர் 1941ஆம் ஆண்டு பிறந்த இவர் மரணிக்கும் போது 82 வயது.

இலங்கையின் 17ஆவது சபாநாயகராகவும் ஜோசப் மைக்கல் பெரேரா பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், எதிர்கட்சியின் தலைமை கொரடா உள்ளிட்ட பதவிகளையும் இவர் வகித்தார்.

இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.