எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைகின்றன
![](https://puthithu.com/wp-content/uploads/2015/11/Fuel-012.jpg)
எரிபொருள் விலைகள் இன்று (29) நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதுள்ளார்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்.
அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெற்றோல் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
ஒட்டோ டீசல் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 295 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.