யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: வாக்களிப்பிலிருந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் விலகின

🕔 March 3, 2022

யுக்ரைனில் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டுமென்றும், அதன் அனைத்து படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்டப்ட வாக்கெடுப்பில் மொத்தம் 141 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 5 நாடுகள் எதிராக வாக்களித்த அதேவேளை, 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதில் இருந்து விலகிய 34 நாடுகளில் இந்தியா மற்றும் இலங்கையும் அடங்கும்.

யுக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் “ஐரோப்பாவில் பல தசாப்தங்களாக சர்வதேச சமூகம் கண்டிராத அளவில் உள்ளன. மேலும் இந்த தலைமுறையை – போர் கசப்பிலிருந்து காப்பாற்ற அவசர நடவடிக்கை தேவை” என்று, அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தீர்மமானம் “உடனடியாக அமைதியான முறையில் மோதலைத் தீர்க்க வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளதோடு, “சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான” பேரவையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது எனவும் கூறுகிறது.

கிழக்கு யுக்ரைனின் இரண்டு பிரிவினைவாதப் பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் முடிவை ரஷ்யா திரும்பப் பெற வேண்டும் என்று 96 நாடுகளின் இணை அனுசரணையுடன் கூடிய சபை தீர்மானம் மேற்கோண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்