பரசிட்டமோல் விலையை அதிகரித்து, வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

🕔 March 3, 2022

ரசிட்டமோல் 500 மில்லி கிராம் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

வர்த்தமானியின்படி, 500 மி.கி பரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச விலை 2 ரூபா 30 சதமாகும்.

28 பிப்ரவரி 2022 முதல் புதிய விலை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னர் 500 மி.கி பரசிட்டமோல் மாத்திரையின் மாத்திரை 01 ரூபா 71 சதமாகும்.

Comments