‘வாழும் வரை போராடு’ பாடல் புகழ் இசையமைப்பாளர் பொப்பி லஹரி மரணம்

🕔 February 16, 2022

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான பொப்பி லஹரி (bobby lahari) மும்பை மருத்துவமனையில் இன்று (16) புதன்கிழமை காலை 69ஆவது வயதில் காலமானார்.

வங்காள குடும்பத்தில் பிறந்தவரான பப்பி லஹரி பாலிவுட் திரையுலகில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர்.

கடந்த ஆண்டு கொவிட் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு சுகயீனம் ஏற்பட்டமை காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை அவர் மரணமடைந்தார். அவருக்கு பப்பா லஹரி என்ற மகனும், ரமா லஹரி மகளும் உள்ளனர்.

அவரது மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இசைப் பயணம்

பொப்பி லஹரி – வங்காளம், குஜராத்தி, தமிழ், கன்னடம் எனப் பல மொழிகளிலும் இவர் இசையமைத்துள்ளார்.

1980-90களில் டிஸ்கோ எனப்படும் மேற்கத்திய இசை வடிவத்தை இந்திய சினிமாவில் இவர் பிரபலப்படுத்தினார்.

1973ம் ஆண்டு ‘நன்ஹா சிகாரி’ எனும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் தமிழில் இசையமைத்த அபூர்வ சகோதரிகள், பாடும் வானம்பாடி உள்ளிட்ட பல திரைப்படப் பாடல்கள் மிகவுமை் பிரபலமானவை.

அவரின் இசையில் உருவான ‘வாழும் வரை போராடு’ பாடல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்