இரண்டு சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

🕔 February 16, 2022

ரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடிய சின்னங்களின் பட்டியில் இருந்து, இரண்டு சின்னங்களை நீக்குவதாகக் குறிப்பிட்டு, தேசிய தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் மேற்படி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் எனும் பட்டியலில் மேற்படி இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

இரண்டு சின்னங்களும் தேசிய சின்னங்களுக்கு ஒத்ததாக இருப்பதால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, இந்தச் சின்னங்ககள் அரசியல் கட்சிகளுக்கு சின்னமாக ஒதுக்கப்படக் கூடாது என்றும், எதிர்காலத்தில் நாட்டின் எந்த அரசியல் கட்சியும் அதை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்