அமைச்சுக் கடமைகளிலிருந்து விலகி இருக்க நிமல் லான்சா தீர்மானம்: வேலை செய்வதற்கு செயலாளர் தடையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு

🕔 February 16, 2022

மைச்சுக் கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சு நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்கவின் நடைமுறைச் சாத்தியமற்ற அணுகுமுறை காரணமாக கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும் இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்த விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுப் பதவியில் இருந்து தான் விலகுவது குறித்து பதிலளித்துள்ள அமைச்சர்; அமைச்சின் செயலாளர் தமக்கு இடையூறாக நிற்பதால், மக்களின் நலனுக்காக, தன்னால் பணிகளைச் செய்ய முடியாது போனதாக அவர் கூறியுள்ளார்.

தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்த முடியவில்லை என்றும், நடைமுறைக்கு மாறான பல்வேறு விதிமுறைகளை மேற்கோள்காட்டி செயலாளர், தன்மை தடுத்து வருகிறார் எனவும் நிமல் லான்சா மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே அமைச்சில் உள்ள தமது பணியாளர்களை, அமைச்சக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதாகவும் லன்சா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தான் இன்னும் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என்று ராஜாங்க அமைச்சர் லன்சா தெரிவித்துள்ளார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்