அரச ஊழியர்களுக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக வேதனம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது: யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?

🕔 January 13, 2022

ரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

மாதாந்தம் வேதனம் பெறும் நிலையான அல்லது தற்காலிக மற்றும் ஒப்பந்த கால ஊழியர்கள் மற்றும் நாளாந்த வேதனம் பெறும் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

வேதனமின்றி விடுமுறையில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது.

அத்துடன், வேதன விடுமுறையில் இருக்கும் ஊழியர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது.

நாளாந்தம் வேதனம் பெறும் நபர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டிய முழு நாட்களும் சமூகமளித்திருந்தால் முழு கொடுப்பனவும் வழங்கப்பட் வேண்டும் என்பதுடன், முழுமையாக சமூகமளிக்காதிருந்தால் அவர்கள் சமூகமளித்திருக்கும் நாட்களுக்கு அமைய கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments