நிதியமைச்சு பதவி நீக்கியவரை, ஜனாதிபதி மீளவும் நியமித்தார்: லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் தொடர்பில் நடந்த கூத்து

🕔 January 13, 2022

தவி விலக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே லிட்ரோ கேஸ் நிறுவத்தின் தலைவர் தெசார ஜயசிங்க மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் முனையத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட பின்னரே லிட்ரோ நிறுவன தலைவரை, அதே பதவியில் மீண்டும் அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, லிட்ரோ நிறுவனத்தின் தலைவரை பதவி விலக்கும் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.

அத்துடன், லிட்ரோ நிறுவன தலைவராக ரேனுக பெரேராவும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, தெசார ஜயசிங்க மீணடும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  

இன்று காலை கெரவலபிட்டிய − முத்துராஜவெல மாபிம லிட்ரோ எரிவாயு நிறுவன வளாகத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதியை, லிட்ரோ தலைவர் தெசார ஜயசிங்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இதன்போது, பதவிநீக்கம் குறித்து தனக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தெசார ஜயசிங்கவை மீண்டும் தலைவர் பதவிக்கு நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதோடு, புதிய தலைவர் நியமனத்தை ரத்துச் செய்வதற்கான கடிதம் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தொடர்பான செய்தி: லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்