மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு

🕔 November 15, 2021

க்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (15) விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – இன்று (15) உச்ச நீதிமன்றில் ஆராயப்பட்டபோது, அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட றியாஜ் பதியுதீன்; சுமார் 07 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியும் அவர் கைது செய்யப்பட்டு, 05 மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 29 செப்டம்பர் 2020 அன்று விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் றியாஜ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்