கொவிட் மாத்திரை; இலங்கையில் பாவிக்க அனுமதி

🕔 November 15, 2021

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, வாய் வழியாக பயன்படுத்தும் மாத்திரை மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக ராஜாங்கக அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ´மோல்னுபிரவிர் (Molnupiravir´) என்ற மருந்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளில் – முதலில் காய்ச்சலுக்கு சிசிக்கையளிப்பதற்காக இந்த மாத்திரை உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாத்திரையானது அமெரிக்க மருந்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்