பொய்யான செய்திகளை சிலர் பரப்புகின்றனர்; மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் ஜோன்ஸ்டன்

🕔 November 16, 2021

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், மக்கள் பீதியடைந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொய்யான செய்திகளை சிலர் பரப்பி, மக்களை சங்கடப்படுத்துவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகம் நடைபெறும் என, உரிய அமைச்சரும் அரசாங்கமும் உறுதியளித்துள்தாகவும் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மேலும் கூறியுள்ளார்.

சப்புக்கஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு மூடப்படும் என – அரசாங்கம் அறிவித்தமையினை அடுத்து, நாட்டிலுள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து – எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்