ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

🕔 October 22, 2021

பொதுமக்களைத் தாக்குவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரமில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய சம்பவம் குறித்து ‘புதிது’ செய்தித்தளம் அமைச்சரிடம் வினவிய போதே, அவர் இதனைக் கூறினார்.

“சட்டத்தை அமுல்படுத்துவதே பொலிஸாரின் பணி” என்றும், “குற்றமிழைத்தவர் யார் என்றாலும் தண்டிக்கப்படுவார்கள்” எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்