இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

🕔 October 22, 2021

மோட்டார் பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘பொலிஸாரின் கொடூரம் மட்டக்களப்பில் தொடர்கிறது. ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் செவிட்டுக் காதுகளில் இது விழுமா’ என்று, அந்த வீடியோ பகிரப்பட்ட பதிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் ஏறாவூரில் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சின் கீழ் – பொலிஸ் திணைக்களம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments