சஜித், ரணில் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை: ஹரீன் எம்.பி தகவல்

🕔 February 8, 2021

ஜித் பிரேமதாஸ தலைமை வகிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்ததாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு தகவல் தெரிவித்த பின்னர், தான் – ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாகக் கூறியுள்ள ஹரீன் பெனாண்டோ; இது தொடர்பில் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தனவுடன் கலந்துரையாடலைத் தொடருமாறு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆரம்பித்த இந்தக் கலந்துரையாடலின் நோக்கம்; இரு கட்சிகளையும் ஒன்றிணைத்து எதிர்க்கட்சிகளுக்கு பொதுவான எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதாகும் எனவும் ஹரீன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது குறித்த பொதுவான ஒருமித்த கருத்தை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியை தமது கட்சி அணுகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் ஒரு கூட்டணியாக வரப்போகிறோமா அல்லது அவர்கள் தனி கட்சியாக அல்லது ஒரு பொதுவான சின்னத்தின் கீழ் செல்லப் போகிறோமா என்பதை நாங்கள் பின்னர் தீர்மானிப்போம்” எனவும் ஹரீன் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்