புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது: அமைச்சர் சரத் வீரசேகர

🕔 December 27, 2020

புதிய அரசியலமைப்பை உருவாக்கும்வரை, மாகாணசபை தேர்தல்களை நடத்தக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர கூறியுள்ளார்.

அஹன்கமவில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பில் மாகாணசபைகள் தொடர்பான புதிய சட்டங்கள் உள்வாங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாகாணசபைகள் குறித்த தனது கருத்தினை தான் பலமுறை வெளிப்படுத்திவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“ஒருநாடு ஒரு சட்டம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தப் போவதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒன்பது மாகாணங்களிலும் வெவ்வேறு சட்டங்கள்கள் காணப்பட முடியாது” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“இதன் காரணமாக மாகாணசபைகள் முறையை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கவேண்டும் என கூறியுள்ள அவர்; “தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக, புதிய அரசியலமைப்பினை உருவாக்கும்வரை, மாகாணசபை தேர்தல்களை பிற்போடவேண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்