தெரண ஊடக நிறுவன வாகனத்தினுள் மதுபோத்தல்; குடிபோதையில் இருவர் கைது: மட்டக்குளியவில் நேற்று சம்பவம்

🕔 December 27, 2020

தெரண ஊட நிறுவனத்தின் சின்னத்துடன் வாகனம் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

அந்த வாகனத்தின் சாரதியும், அவரின் உதவியாளரும் குடிபோதையில் இருந்ததால், அந்த வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியதோடு சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறித்த வீடியோவில், வாகனத்தில் உள்ள தெரண ஊடகத்தின் சின்னத்தை பொலிஸார் சுட்டிக்காடுவதையும், நபர்கள் கைது செய்யப்படுதையும் காண முடிகிறது. இந்த வீடியோ – கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தின் முன் இருக்கையில் மது இருந்ததாக நம்பப்படும் ஒரு போத்தலும், ‘கப்’ ஒன்றும் காணப்படுகின்றன.

இதேவேளை தெரண ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள தன்னிலை விளக்கத்தில், குறித்த வாகனம் வாடகைக்கு பெறப்பட்டதாகவும், அதனுள் இருந்த இருவரும் தெரண ஊடகத்தின் ஊழியர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மட்டக்குலியவில் நிகழ்ந்துள்ளது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்