வதந்தி பரப்பியமைக்காக, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் குறித்த தகவல் வெளியானது

🕔 April 7, 2020

கொரோனாவை தொடர்புபடுத்தி பொய்யான தகவலைப் பரப்பிய குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண், ‘சிறிலங்கா பரா டான்ஸ்போர்ட் அசோசியேசன்’ (Sri Lanka Para Dancesport Association) அமைப்பின் பொதுமக்கள் தொடர்பு இணைப்பாளர் என்று, ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளம் ஊடாக திலினி மீவேவா எனும் 41 வயதுடைய மேற்படி பெண், இலங்கையின் உயர் மட்ட அரசியல்வாதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் பரப்பியிருந்தார்.

பாணந்துறை – ரஜமஹ விகாரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே, இவ்வாறு பொய்யான தகவலைப் பரப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

உறுதிப்படுத்தப்படாத, பொய்யான தகவலைப் பரப்பியதாக கைது செய்யப்பட்ட மேற்படி பெண், நேற்றைய தினம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை 09ஆம் திகதி வரை விளக்க மறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்பான செய்தி: கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்